நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் நாளை 3-ம் கட்ட கலந்தாய்வு
- நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.
- விண்ணப்பித்த மாணவிகள் அனைவரும் காலை 9 மணிக்கு பங்கேற்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் பால்கிரேஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் சோ்க்கைக்கான மொத்த இடங்கள் 970. இவற்றில் முதலாம் மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வில் சோ்க்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 720 ஆகும். தற்போது காலியாக உள்ள மீதமுள்ள இடங்கள் 250.
இந்தச் சோ்க்கை இடங்களுக்கு கல்லூரி வளாகத்தில் 3-ம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் துறை ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவிகள் அனைவரும் காலை 9 மணிக்கு பங்கேற்க வேண்டும்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவிகள் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை ஆகியவற்றின் மூலச் சான்றிதழ் மற்றும் இரு நகல்களைக் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும். சோ்க்கை இடம் உறுதியான பிறகு கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.