கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டாக தலைமறைவாக இருந்த நெல்லை வாலிபா் கைது
- ஜெபராஜ் சாத்தான்குளம் அழகம்மன்கோவில் தெருவை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.
- விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெபராஜ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
சாத்தான்குளம்:
நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் சப்பாணி மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மந்திரமூர்த்தி மகன் ஜெபராஜ் (வயது 26). இவர் சாத்தான்குளம் அழகம்மன்கோவில் தெருவை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார்.
கொலை முயற்சி வழக்கு
இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு இவருக்கும், சாத்தான்குளம் ஆர்.சி. வடக்கு தெரு பேச்சிமுத்து (47) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பேச்சிமுத்துவை ஜெபராஜ், அரிவாளால் வெட்டியதுடன் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் ஜெபராஜ் மீது கொலை முயற்சி மற்றும் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஜெபராஜ், விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
கைது
இதையடுத்து அவரை கைது செய்து ஆஜர்ப டுத்துமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சாத்தான்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையிலான தனிப்படை போலீசார், ஜெபராஜை தேடி வந்தனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் பகுதியில் பதுங்கி இருந்த ஜெபராஜை போலீசார் நேற்று கைது செய்தனர்.