உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் 400 விநாயகர் சிலைகள்‌ பிரதிஷ்டை

Published On 2022-08-26 10:40 GMT   |   Update On 2022-08-26 10:40 GMT
  • இந்து முன்னணி சார்பில் 34-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
  • 2-ந் தேதி விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை––யொட்டி 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்‌ பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக இந்து முன்னணி யினர் தெரிவித்துள்ளனர். கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம்

இந்து முன்னணி சார்பில் 34-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சிவப்புகழ் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் தங்கவேல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட பொறுப்பாளர்கள் ரவி பாரதி, அன்னூர் கார்த்திக், மந்தைவேல், நகர பொறுப்பாளர்கள் ராஜ்மோகன், புஷ்பராஜ், காளியப்பன், சாஸ்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வருகிற 31-ந் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என்றும், அதைத்தொடர்ந்து 2-ம் நாள் கோ பூஜை, விளக்கு பூஜை, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது, 2-ந் தேதி விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும்.

மேட்டுப்பாளையத்தில் 85 விநாயகர் சிலைகளும், காரமடையில் 202 

Tags:    

Similar News