உள்ளூர் செய்திகள்

மாநகராட்சி தண்ணீர் குடித்து மேலும் 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2024-06-15 06:15 GMT   |   Update On 2024-06-15 06:15 GMT
  • பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.
  • 6 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட சின்ன எலசகிரி அம்பேத்கர் காலனியில் 300 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இந்த பகுதியில் மாநகராட்சி குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு அதனை பயன்படுத்தியவர்களில், 27 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுவலி, வயிற்று போக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மேலும் 24 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களில், 46 பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையில் 4 பேர் மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 51 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று இரவு, அந்த பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.

இதனால் அப்பகுதி பொது மக்களிடையே பீதியில் உள்ளனர்.

Tags:    

Similar News