சேலம் ரெயில்வே கோட்டத்தில், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்ற 75 பேர் கைது
- கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர்.
- இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் வழியாக தினமும் 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தினசரி சென்று வருகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் எடுத்து முறைகேடாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு (ஆர்.பி.எப்) புகார் வந்தது. இதையடுத்து போலீசார், முறைகேடாக டிக்கெட் விற்பனையில் ஈடுப டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி.யில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை வைத்துக்கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்பவர்களை பணபரிமாற்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
75 பேர் கைது
அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்க
ளிடம் இருந்து ரூ.28 லட்சம்
மதிப்பிலான டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த
னர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட கணினி உள்ளிட்ட மின்னணு எந்திரங்களையும் கைப்பற்றினர்.
ரூ.1 லட்சம் மதிப்பு
நடப்பாண்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சேலம் ரெயில்வே கோட்டத்தில் 4 வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி பெயரில் எடுக்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான ரெயில் டிக்கெட்டுகளை ஆர்.பி.எப். போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.