உள்ளூர் செய்திகள்

கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராத தீர்த்தமலை பேருந்து நிலையம்.

சுற்றுலா வாகன நிறுத்தமாக மாறிய பேருந்து நிலையம்

Published On 2023-02-27 09:48 GMT   |   Update On 2023-02-27 09:48 GMT
  • ரூ. 17 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
  • பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதையும் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

அரூர்,

அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. எனவே தினந்தோறும் அதிக அளவிலான பக்தர்கள் இங்கு வந்து செல்வர்.

அத்துடன் திருவண்ணாமலை பேருந்துகளும் இந்த வழியாக சென்று வருகிறது. சாலையில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கருத்தில் கொண்டு 2013ல் ரூ. 17 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இது குறித்த பொதுமக்கள் கூறுகையில், பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதனால் அரசு, தனியார் பேருந்துகள் சாலையிலேயே நின்று சென்றுவிடுகிறது, பேருந்திற்கு காத்திருக்கும் பயணிகள் வெயில், மழையில் சாலையிலேயே காத்திருக்க நேரிடுகிறது. இத்துடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

தற்போது அந்த பேருந்து நிலையம் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. எனவே பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதுடன் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வதையும் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News