உள்ளூர் செய்திகள்

கண்டெடுக்கப்பட்ட சுடுமண் காதணிகளை படத்தில் காணலாம்.

பண்ருட்டி அருகே சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண் காதணி கண்டெடுப்பு

Published On 2023-01-12 08:22 GMT   |   Update On 2023-01-12 08:22 GMT
  • பேராசிரியர் ரமேஷ், மற்றும் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.
  • சங்க கால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணி கள் கண்டெடுக்கப்பட்டது.

கடலூர்:

பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ், மற்றும் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர், அப்பொ ழுது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணியை கண்டறிந்தார்கள். இதை குறித்து அவர்கள் கூறியதாவது:- 

ஏற்கனவே பண்ருட்டி பகுதி தென்பெண்ணை யாற்றங்கரையில் மேற்புர களஆய்வின் போது சுடு மண் பொம்மை, வட்ட சில்லு, சுடுமண் புகை பிடிப்பான், சுடுமண் அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆற்று படுக்கையில் ஆய்வு மேற்கொண்ட போது சங்க கால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணி கள் கண்டெடுக்கப்பட்டது கண்டெடுக்கப்பட்ட காதணிகள் வட்ட வடிவம் மற்றும் தோடு போன்ற வடிவத்தையும் கொண்டதாக உள்ளது. தோடு போன்ற அமைப்பினைக்கொண்ட காதணியின் மேற்புறத்தில் அழகாக கோட்டு ருவம் போன்று வரை யப்பட்டுள் ளது. இந்த கோட்டுஉருவம் அக்கால மக்களின் கலை நுணுக்கங்களை காட்டு வதாக உள்ளது, சுடுமண் பொருட்கள் காலத்தால் அழியாதது. எளிதில் சேத மடையாது என்பதால் பண்டைய காலத்தில் சுடுமண் காதணிகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இதுபோன்ற சுடுமண்ணா லான காதணிகள் மதுரை கீழடியில் நடந்த அகழ்வாய்வு களில் கிடைத்துள்ளது என்று கூறினார்கள்.

Tags:    

Similar News