உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் லோன் தருவதாக கூறி தனியார் வங்கி உதவி மேலாளர் புகைப்படத்தை மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டல்

Published On 2022-10-22 09:54 GMT   |   Update On 2022-10-22 09:54 GMT
  • பேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் கிரடிட் மூலம் லோன் தருகிறோம் என ஒரு விளம்பரம் வந்தது.
  • சில நாட்கள் கழித்து எனது போட்டோவை மார்பிங் செய்து எனது மொபைலுக்கு அனுப்பி குறுந்தகவல் வந்தது.

தஞ்சாவூர்:

தஞ்சை சேர்ந்த ஒரு தனியார் வங்கி உதவி மேலாளர். இவர் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது :-

எனது பேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் கிரடிட் மூலம் லோன் தருகிறோம் என ஒரு விளம்பரம் வந்தது. மேலும் கிரடிட் லோன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்பட்டது.

அதன்படி நானும் மொபைலில் பதிவிறக்கம் செய்தேன்.

இதை எடுத்து எனது மொபைலில் கேலரி, தொடர்பு எண்கள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு செயலிக்கு நான் அந்த செயலில் கூறப்பட்டுள்ள மாதிரி அக்சஸ் செய்து கொண்டேன்.

பின்னர் உங்களுக்கு லோன் தருகிறோம். அதற்காக நீங்கள் கட்டணமாக ரூ.5000 செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. இதனால் நான் அந்த கட்டணத்தை செலுத்தாமல் வெளியேறி விட்டேன்‌‌.

சில நாட்கள் கழித்து எனது வங்கி கணக்குக்கு ரூ.9000 வரவு வைக்கப்பட்டது.

இந்த பணம் அந்த செயலி மூலம் வரவு வைக்கப்பட்டது என்பதை அறிந்தேன்.

இருந்தாலும் நான் அதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன்.

சில நாட்கள் கழித்து எனது போட்டோவை மார்பிங் செய்து எனது மொபைலுக்கு அனுப்பி இதனை வெளியிடாமல் இருப்பதற்காக ரூ.14700 தர வேண்டும் என குறுந்தகவல் வந்தது.

மேலும் மார்பிங் செய்யப்பட்ட எனது போட்டோவை எனது உறவினர்களுக்கும் அந்த மர்ம நபர்கள் அனுப்பி வைத்துள்ளனர் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.

ஏமாற்றப்பட்டோம் என்பதையும் உணர்ந்தேன். எனவே மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் -இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News