கோவையில் இருந்து காசிக்கு ரெயிலில் ஆன்மீக சுற்றுபயணம்
- செப்டம்பர் முதல் வாரம் தொடங்கும் பயணமானது 16 நாட்களில் நிறைவு பெறுகிறது.
- இதற்கான கட்டணம் ரூ.22 ஆயிரத்து 900 மட்டுமே வசூலிக்கின்றனர்.
கோவை,
கோவை மருதமலை சாலை பி.என்.புதூரில் வசந்த் அன் கோ எதிரில் பிரியா டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. டிராவல்ஸ் துறையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த இந்நிறுவனம், ஏராளமான பக்தர்களை ெரயிலில் ஆன்மீக சுற்றுப்பயணம் அழைத்து ெசன்றுள்ளது.
அதேபோன்று இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் காசியாத்திரைக்கு பக்தர்களை ெரயிலில் அழைத்து செல்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். செப்டம்பர் முதல் வாரம் தொடங்கும் பயணமானது 16 நாட்களில் நிறைவு பெறுகிறது.
காசி, அலகாபாத், அயோத்தியா, கயா, புத்தகயா, டெல்லி, ஆக்ரா, மதுரா, ஜெய்ப்பூர், ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கான கட்டணம் ரூ.22 ஆயிரத்து 900 மட்டுமே வசூலிக்கின்றனர்.
காசியாத்திரை செல்ல விரும்புபவர்கள் தற்போது ரூ.5 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ெரயில் கட்டணம், உணவு கட்ட ணம், தங்கும் வசதி (தனித்தனி அறை) அனைத்தையும் இந்நிறுவனத்தாரே தனது சொந்த செலவில் செய்து தருகின்றனர்.
இது குறித்து பிரியா டிராவல்ஸ் நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டர் பிரியா மற்றும் நிர்வாக இயக்குநர் சுகுமார் ஆகியோர் கூறுகையில், காலம்காலமாகவே எங்களது குடும்பத்திற்கு தெய்வீக பற்றுதல் உண்டு. எனவே அதன் அடிப்படையில் தெய்வீக சுற்றுலா அடிக்கடி செல்வோம்.
அதே போன்று அனைத்து பக்தர்களும் அதனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தெய்வீக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தோம். அதுவே வருடா வருடம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொதுமக்களும், பக்தர்களும் இத்தகைய அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, மிகவும் முக்கியமான புண்ணிய தலங்களில் தங்களது பாதத்தை பதித்து, பாவம் நீங்கி, புண்ணியம் பெற்று இன்பத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்
இவ்வாறு அவர்கள் கூறினர்.