கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உயிருடன் மீட்பு
- கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உயிருடன் மீட்கப்பட்டார்.
- தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிறுவள்ளூரில் உள்ள வாய்க்காலில் கை, கால்களை கழுவுவதற்காக திருவண்ணாமலை மா வட்டம் இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்த சின்னப்பராஜ் (வயது 22) என்பவர் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று சின்னப்பராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிக்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கால்வாயில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
இதனிடையே இரவு வெகு நேரம் ஆனதால் சின்னப்பராஜை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்த ப்பட்டது. இதையடுத்து 2-வது நாளாக நேற்று மீண்டும் தேடும் பணியில் மீட்டனர். இந்த நிலையில் வடசிறுவள்ளூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தட்டாரணை பகுதியில் மாலை 5 மணி அளவில் சின்னப்பராஜ் ஒரு மரக்கிளையை பிடித்தவாறு உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர் 25 மணி நேரத்துக்கு மீட்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.