உள்ளூர் செய்திகள்

  அகர்வால் கண் மருத்துவமனையில் கண்தான இருவார விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

நெல்லை வண்ணார்பேட்டை அகர்வால் கண் மருத்துவமனையில் கண்தான இருவார விழா

Published On 2022-09-07 09:53 GMT   |   Update On 2022-09-07 09:53 GMT
  • டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து 37-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா
  • டாக்டர் லயனல்ராஜ் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆற்றிய சாதனைகள் பற்றியும், கண் தானத்தின் பயன்கள், கண்தானத்தின் அவசியம் குறித்தும் பேசினார்

நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் வங்கி மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து 37-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடந்த 25-ந் தேதி முதல் நடந்து வந்தது.

நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மருத்துவமனையின் கண் வங்கி உதவி ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் வரவேற்று பேசினார்.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் லயனல்ராஜ் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆற்றிய சாதனைகள் பற்றியும், கண் தானத்தின் பயன்கள், கண்தானத்தின் அவசியம் குறித்தும் பேசினார். விழாவில் மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எஸ்.எம்.குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்தானம் அளித்த குடும்பத்தினர் மற்றும் கண்தானம் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் பல்வேறு அமைப்பின் தலைவர்கள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பேச்சுப்போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவமாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இதயம் ராஜேந்திரன் கண்தான அறக்கட்டளை முத்து, மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை ஜெயக்குமார், டீம் டிரஸ்ட் லயன் திருமலை முருகன், முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் பூர்ணிமா நன்றி கூறினார்.

Tags:    

Similar News