உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சிக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

தஞ்சையில், வருகிற 18-ந் தேதி மகளிருக்கான 'புடவையில் ஓர் நடைப்பயணம்'

Published On 2023-02-15 07:34 GMT   |   Update On 2023-02-15 07:34 GMT
  • 36 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கி.மீ நடைபயணம் நிர்ணயம்.
  • முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரம் நிர்ணயம்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இன்னர் வீல் சங்கமும், வீ.கே.சி. பிரைடு நிறுவனமும் இணைந்து வருகிற 18-ந்தேதி காலை 7 மணிக்கு தஞ்சை பெரிய கோவிலிருந்து அனைத்து மகளிருக்கான "புடவையில் ஓர் நடைப்பயணம்", பாரம்பரிய உடைகளுக்கான கவுரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக நடத்த இருக்கிறது.

நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைக்கிறார்.

மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் மேயர் சண். இராமநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டின் குழுத்தலைவர் டாக்டர். உஷா நந்தினி, தலைவர் டாக்டர். சோபியா மற்றும் இன்னர் வீல் சங்கத்தின் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

இதில் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு 4 கி.மீ நடைபயணமும், 36 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கி.மீ நடைபயணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுவர்களுக்கு முதல்பரிசாக ரூ. 7 ஆயிரத்து 500-ம், 2-ம் பரிசாக ரூ. 5 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரத்து 500-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 1 கி.மீ தூரம் நிர்ணயம் செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 3 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆதார் அட்டையுடன் ரூ. 100 பதிவு கட்டணத்தை இன்று மாலைக்குள் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

போட்டியன்று பதிவு செய்பவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ. 200 ஆகும்.

மேலும், கல்லூரி மாணவிகளுக்கு பதிவுக்கட்டணம் இல்லை. ஆனால், கல்லூரி அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக புடவை அணிந்து வர வேண்டும்.

இதுகுறித்த விபரங்களுக்கு நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகவடிவு தொலைபேசி எண். 9730669869 மற்றும் புவனா தொலைபேசி எண். 9894866277 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Tags:    

Similar News