கூடலூர் அருகே 2 வீடுகளை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை
- காட்டு யானை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
- காட்டு யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி சுண்ட வயல் பகுதிக்குள் புகுந்தது.
ஊட்டி
கூடலூர் அடுத்த பாடந்துறை அருகே உள்ளது சுண்டவயல் கிராமம். இந்த பகுதியையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.
இங்கு காட்டு யானை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து, விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதுடன், வீடுகளை இடித்து தள்ளி வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு காட்டு யானை ஒன்று வனத்தை விட்டு வெளியேறி சுண்ட வயல் பகுதிக்குள் புகுந்தது.
அங்கு வெகுநேரமாக சுற்றி திரிந்த காட்டு யானை, அந்த பகுதியில் உள்ள சுப்பிரமணி மற்றும் பிரபாகரன் ஆகியோரின் வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
தொடர்ந்து காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். யானையின் நடமா ட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.