உள்ளூர் செய்திகள்

சூளையில் ரோந்து சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரவுடி பயங்கர ரகளை- போலீசார் பிடித்து தீவிர விசாரணை

Published On 2023-11-17 10:42 GMT   |   Update On 2023-11-17 10:42 GMT
  • வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ விசாரணை நடத்தி வருகிறார்.
  • போதையில் கலாட்டா செய்த ரவுடி கிஷோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை:

சென்னை வேப்பேரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கவுரி. இவர் சூளை குறவன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த ரவுடி கிஷோர் சப்-இன்ஸ்பெக்டர் கவுரியிடம் சென்று ரகளையில் ஈடுபட்டார். மதுபோதையில் சப்-இன்ஸ்பெக்டர் எதிரில் நின்றபடியே அவதூறான வார்த்தைகளை பேசிய அவர் "நான் ஆம்பள... எனக்கு பயமே இல்ல... எத்தன பேர் வந்தாலும் சண்டை செய்வேன்" என்று பேசியபடியே அங்குமிங்கும் செல்கிறார்.

இதனை மாடியில் இருந்து பொதுமக்களில் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ விசாரணை நடத்தி வருகிறார். பி.வகை ரவுடியான கிஷோர் கால்வாய் கிஷோர் என்றும் அழைக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போதையில் கலாட்டா செய்த ரவுடி கிஷோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளனர்.

Tags:    

Similar News