பனையூரில் வைத்து நிவாரணம் - விஜய்-க்கு சீமான் ஆதரவு
- கூட்டம் கூடி பிரச்சனை ஏற்பட்டால் அதற்கும் விமர்சனம் செய்வீர்கள்.
- கூட்டம் கூடி பிரச்சனை ஏற்பட்டால் அதற்கும் விமர்சனம் செய்வீர்கள்.
திருப்பூர்:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் வைத்து நிவாரணம் வழங்கியது கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் களத்தில் நிற்க முடியவில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்ததை பாராட்டலாம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மேலும் சீமான் கூறுகையில், விஜய் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றால் பாதிக்கப்பட்டோரின் கூட்டத்தை விட அவரை பார்க்க வந்தோரின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் களத்திற்கு விஜய் செல்லவில்லை. கூட்டம் கூடி பிரச்சனை ஏற்பட்டால் அதற்கும் விமர்சனம் செய்வீர்கள். விஜய் கொடுக்க வேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம்தான். விஜய் அளித்த நிவாரணத்தை கூட மற்றவர்கள் அளிக்கவில்லையே? நிவாரணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை பாராட்ட வேண்டும் என்றார்.