தமிழ்நாடு
ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்கு ரூ. 10 லட்சம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்
- ஃபெஞ்சல் புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
- நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.