தமிழ்நாடு

அமரன் விவகாரம்: ரூ.1.10 கோடி இழப்பீடு.. படத்தை ஓடிடி-ல் வெளியிட தடை..- நீதிமன்றத்தில் மாணவர் வழக்கு

Published On 2024-12-04 12:38 GMT   |   Update On 2024-12-04 12:38 GMT
  • அமரன், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
  • அமரன் நாளை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாவுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இதைதொடர்ந்து, அமரன் நாளை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாவுள்ளது.

இந்நிலையில், அமரன் படத்தில் தனது செல்போன் எண்ணை பயன்படுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மாணவர் வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பான மனுவில், " சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த மனுவில், மொபைல் எண் வரும் காட்சியை நீக்கக் கோரி ஏற்கனவே தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் தவறை திருத்தவில்லை.

அதனால், படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கவும், தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News