தமிழ்நாடு

புயலை வைத்து சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-12-04 14:04 GMT   |   Update On 2024-12-04 14:04 GMT
  • வட சென்னையில் தொடங்கப்பட்ட 87 பணிகளில் 27 மணிகள் முடிவடைந்துள்ளது.
  • சென்னை மக்களின் தேவைகளை பார்த்து, பார்த்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ரூ.1,383 கோடி மதிப்பிலான வட சென்னை வளர்ச்சித் திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் நடைபெறும் விழாவில் 79 புதிய திட்டப்பணிகளும், 29 முடிவுற்ற பணிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவர் பேசியதாவது:-

வட சென்னை வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வர வேண்டுமென அமைச்சருக்கு அறிவுறுத்தினேன்.

வட சென்னையில் தொடங்கப்பட்ட 87 பணிகளில் 27 மணிகள் முடிவடைந்துள்ளது.

சென்னையை நம்பி வந்தவர்களை என்றும் சென்னை கைவிட்டதில்லை. வட சென்னைக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும்.

சென்னை மக்களின் தேவைகளை பார்த்து, பார்த்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மெட்ராஸ் என்கிற பெயரை சென்னை என மாற்றியவர் கருணாநிதி. சென்னையின் அடையாளங்களை உருவாக்கியது திமுக அரசு.

வானிலை கணிப்பைவிட அதிக மழை கொட்டீத் தீர்த்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவோம். சென்னையை மீட்டு எடுத்ததுபோல், மற்ற மாவட்டங்களையும் விரைவில் மீட்டெடுப்போம். ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டு வரும்.

முன்பு சென்னையில் எப்போது வெள்ளம் வடியும் என காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

கடந்த ஆட்சியில் தன்னார்வலர்கள் வழங்கும் நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டினார்கள். வெள்ள பாதிப்பு நேரத்திலும் மக்களின் வேதனைகளை அவதூறு பரப்பி ஆதாயம் அடைய மலிவான அரசியலில் சிலர் ஈடுபடுகின்றனர்

நம்மை பற்றி விமர்சனம் செய்பவர்களுக்கும் பணியாற்றி வருகிறோம். எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

விடியலை விடியா ஆட்சி என்று சொல்பவர்கள்,

தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளிய அந்த விடியா மூஞ்சிகளுக்கு என்னைக்குமே விடியாது.

விடியலை தருவது தான் உதய சூரியன். சூரியனை பார்த்தால் கண் கூசுபவர்களுக்கு விடியல் என்றால் என்னவென்றே தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News