உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் வெறிச்சோடி காணப்பட்ட அலுவலகம்.

நெல்லை மாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் பணி புறக்கணிப்பு போராட்டம்- அலுவலகங்கள் வெறிச்சோடின

Published On 2023-03-28 09:13 GMT   |   Update On 2023-03-28 09:13 GMT
  • நெல்லை மாவட்டத்தில் இன்று 500-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போராட்டத்தால் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.

நெல்லை:

வருவாய் துறையில் துணை கலெக்டர் நிலையில் பதவி உயர்வு வழங்கும் பட்டியலை கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசு வெளியிடாமல் இருப்பதனால் பலர் பதவி உயர்வு பெறும் முன்பே ஓய்வு பெற்று விடுகின்றனர்.

இதுபோல் பல ஆண்டுகளாக துணை தாசில்தாராக பணி செய்து வருபவர்கள் பட்டியல் திருத்தங்கள் காரணமாக முதல் நிலை வருவாய் ஆய்வாளராக பணி இறக்கம் செய்யும் நடைமுறையை மாற்ற வேண்டியும் கடந்தவாரம் வருவாய் துறை அதிகாரிகள் விடுப்பு எடுத்து ஒருநாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று 500-க்கும் மேற்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அலு வலகங்கள் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகளான சான்றிதழ்கள் பெறுவது, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.

நெல்லை கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள வருவாய் துறை அலு வலங்களில் பணிபுரியும் பெரும்பாலான அதிகாரிகள் இன்று பணிக்கு வரவில்லை.

Tags:    

Similar News