அப்துல்கலாம் பிறந்த நாள் விழா-கோவில்பட்டியில் ரத்ததான முகாம்
- அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- ரத்ததான முகாமிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமை தாங்கினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், வண்டானம் கருப்பசாமி, நகரச் செயலர் விஜயபாண்டியன், வக்கீல் அணியை சேர்ந்த சிவபெருமாள், சங்கர்கணேஷ், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ராமர், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைர் அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமிற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசன் தலைமை தாங்கினார். உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துராஜ், சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. முகாமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ரத்த வங்கி மருத்துவர் தேவசேனா தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற 50 பேரிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனர். ஏற்பாடுகளை ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்தனர்.