போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல்துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்க உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல்துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலையரசன் தலைமை வகித்து போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் குறித்தும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்க உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில் வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி, துணைத்தலைவர் ராஜா,வேலூர் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் சுந்தரம், கரூர் அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன், வேலூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், அரசு மகளிர் கல்வி நிறுவன மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.