உள்ளூர் செய்திகள் (District)

ஐகோர்ட்டு உத்தரவு: ஈஷா மையத்தில் போலீஸ் நேரில் ஆய்வு

Published On 2024-10-01 06:20 GMT   |   Update On 2024-10-01 06:20 GMT
  • சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல்
  • போலீஸ் சூப்பிரண்டு யோகா மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு.

கோவை:

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டுதருமாறு கூறி கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று ஐகோர்ட்டில் நடந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் ஈஷா யோகா மையம் மீது எத்தனை குற்றவழக்குகள் உள்ளன? என்ற விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் ஈஷா யோகா மையத்துக்கு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களுடன் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அம்பிகாவும் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை விவரங்களை போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

Tags:    

Similar News