உள்ளூர் செய்திகள்

சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வில் சாதனை படைத்த நாளந்தா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்களை பள்ளியின் தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார். அருகில் இயக்குநர் புவியரசன் உள்ளிட்டோர் உள்ளனர்.

சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வில் கிருஷ்ணகிரி நாளந்தா பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2023-05-18 09:18 GMT   |   Update On 2023-05-18 09:18 GMT
  • 2022-23-ம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற சாதனை படைத்துள்ளனர்.
  • 30 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நாளந்தா இண்டர்நேஷனல் பொதுப்பள்ளியில் 12-ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பில் கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி என்ற சாதனை படைத்துள்ளனர்.

மேலும், இப்பள்ளியில் 12ம் வகுப்பு பயின்ற தினேஷ்ராஜ் என்ற மாணவர் 500க்கு 476 மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணகிரி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதே போல் இப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற 10 மாணவர்கள் 500 க்கு 400 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

10-ம் வகுப்பில் பயின்ற மாணவர் ருத்ராட்சம் 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். மேலும் 30 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை படைத்து பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி, இயக்குனர்கள் கவுதமன், டாக்டர்.புவியரசன் மற்றும் முதல்வர்கள் நினைவுப் பரிசினை வழங்கி வாழ்த்தினர்.

Tags:    

Similar News