உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு பா.ம.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் பாராட்டு தெரிவித்தார்.

பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு பா.ம.க.சார்பில் பாராட்டு

Published On 2023-05-11 10:31 GMT   |   Update On 2023-05-11 10:31 GMT
  • சுவாதி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 596 மதிப்பெண் பெற்றார்.
  • அவரின் பெற்றோரை கவுரவப்படுத்தி, அவர்களின் குடும்பத்திற்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கினார்.

கடலூர்:

நெய்வேலி அருகேயுள்ள வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரைக் கண்ணன். விவசாயி.இவரது மனைவி தங்கம். இவர்களின் மகள் சுவாதி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 596மதிப்பெண் பெற்று மாநில அளவில்3-ம் இடமும், கடலூர் மாவட்ட அளவில் முதல் இடமும் பெற்றுள்ளார். அவரை பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரி வித்து பாராட்டினார். அவரின் பெற்றோரை கவுரவப்படுத்தி, அவர்களின் குடும்பத்திற்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கினார்.

பின்னர்டாக்டர் ராம தாஸ் வழிகாட்டுதலின்படி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிராமதாஸ் அறிவுறுத்தலின் படி, மே 31-ந் தேதிக்குள் வன்னியர் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டி னை வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர், தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட் டோர் ஆணைய தலைவர் ஆகியோருக்கு கடிதம் அனுப்புவதற்கான படி வத்தை வழங்கி, வன்னியர் களுக்கான உள்ஒதுக்கீடு பயன் குறித்தும் எடுத்துக் கூறினார். இதில் பா.ம.க. மாவட்ட அமைப்பு துணை தலைவர் ஜெயக்குமார், என்.எல்.சி. ஊழியர் உக்கரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News