உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரை, ஊசிகளை படத்தில் காணலாம்.

திண்டிவனத்தில் அதிரடி: போதை மாத்திரை, ஊசி சப்ளை செய்த மருந்துகடை அதிபர் கைது

Published On 2022-10-07 07:40 GMT   |   Update On 2022-10-07 07:40 GMT
  • திண்டிவனத்தில் போதை மாத்திரை, ஊசி சப்ளை செய்த மருந்துகடை அதிபர் கைது செய்யப்பட்டார்.
  • முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விழுப்புரம்:

திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போதை ஊசிகள் மற்றும் போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிற்க்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று போலீசார் மேம்பாலம் கீழ் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சீதாராமன் கிராமம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 46) என்பதும், இவர் மெடிக்கல் கடை வைத்துள்ளார்.

மேலும் மொத்த மருந்து விற்பனை நிலையமு ம்வைத்துக்கொண்டு கொண்டு போதை ஊசிகள் மற்றும் மருந்துகளை திண்டிவனம் பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் நேற்றுதிண்டிவனம் பகுதியில் போதை ஊசிகளை விற்பனை செய்வதாக கைது செய்யப்பட்ட விஜயகுமார் இவரது மெடிக்கலில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போதை மாத்திரைகள் மற்றும்போதை ஊசி விற்பனையில் ஈடுபட்டுவந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் இவர்களிடம் இருந்து போதை மாத்திரை 600, ஊசி 10, மற்றும் குளுக்கோஸ் 10, ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.தகவல் அறிந்து திண்டிவனம் மற்றும் மயிலம் காவல் நிலையத்திற்கு விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா நேரடி விசாரணயில் ஈடுபட்டார்.ஏ.எஸ்.பி தனிப்படைக்கு எஸ்பி ஸ்ரீநாதா பாராட்டு தெரிவித்தார்

Tags:    

Similar News