உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு, முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2023-02-08 07:43 GMT   |   Update On 2023-02-08 07:43 GMT
  • தென்காசி மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் கனரக வாகனங்கள் மூலம் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
  • குறிப்பிட்ட அளவு அனுமதி பெற்றுக்கொண்டு அதிக அளவிலான கனிம வளங்கள் கடத்தப்படுவதால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

கடையம்:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தென்காசி, அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

தென்காசி மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் கனரக வாகனங்கள் மூலம் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் தமிழகத்தின் கனிம வளங்கள் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் இந்த கனரக வாகனங்களால் பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் சாலையில் செல்ல அச்சப்படும் அளவிற்கு அதிக பாரத்து டனும், அதி வேகத்துடனும் சென்று வருகிறது.

குறிப்பிட்ட அளவு அனுமதி பெற்றுக்கொண்டு அதிக அளவிலான கனிம வளங்கள் கடத்தப்படுவதால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி தென்காசி மாவட்ட கனிம வளம இயக்கம் சார்பில் வருகிற 13-ந்தேதி புளியரையில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.

இதுதொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பாகவே முறைப்படி தெரிவித்தி ருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளிலும நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.

ஆனால் போராட்டத்தை தடுக்கும் விதமாக காவல்துறையினர், ஆர்.டி.ஓ. மூலமாக எங்கள் நிர்வாகிகள் சிலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். எனவே எங்கள் போராட்டத்திற்கு உரிய அனுமதி வழங்கவும், கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News