மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா கொடியேற்றம்
- ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- சிம்மக் கொடியானது சிறப்பு பூஜைக்கு பின் கோவில் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேட்டு ப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்குண்டம் நிகழ்ச்சி விசேஷமானது ஆகும். இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சிம்மக் கொடியை தாரை, தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் பவானி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்தமிழ் வினாயர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து கொடியுடன் கோவிலை சுற்றி வந்தனர். சிம்மக் கொடியானது சிறப்பு பூஜைக்கு பின் கோவில் முன்புறம் உள்ள கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடைபெற உள்ள து. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்குகின்றனர்.
விழா நிகழ்ச்சிகளை கோவில் துணை ஆணையர் கைலாசமூர்த்தி, பரம்ப ரை அறங்காவலர் வசந்தா ஆகியோ ர் செய்து வருகின்றனர்.