உடுமலை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை
- உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- விபரம் அறிய, கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தை அணுகலாம்.
உடுமலை :
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2022-23ம் கல்வி ஆண்டுக்கான இளநிலைப்பட்ட படிப்பு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது.
இது குறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 2022-23ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது.அவ்வகையில் அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த சேர்க்கை இடம்பெறுகிறது.
இப்பாடப்பிரிவுகளில் சேர விரும்புவோர் www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளம் வாயிலாக வரும் 27-ந் தேதி முதல் ஜூலை 15ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்படி அவரவர் தங்களது பெயர், இமெயில் முகவரி, மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்களை அளித்து பதிவு செய்ய வேண்டும்.விண்ணப்பக்கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒரு முறை செலுத்தினால் போதுமானது. அதேபோல விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.அதனை, சேர்க்கை நடைபெறும் நாளில் கல் லூரிக்கு எடுத்து வர வேண்டும்.
விபரம் அறிய, கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தை அணுகலாம்.இதேபோல, மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை 'சி' சான்று பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியல், சேர்க்கை நடைபெறும் நாட்கள் குறித்த விபரங்கள், www.gacudpt.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும்.இவ்வாறு, அறிக்கையில் உள்ளது.