அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.விடம் ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு
- பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பதுங்கி இருந்த மோசாவை போலீசார் கைது செய்தனர்.
- மோசாவை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அறிவு உத்தரவிட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் அன்னிமங்கலம் கிராமத்தை சார்ந்தவர் ப.இளவழகன். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் வக்கிலாக பணிபுரிந்து வருகிறார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தார். சுற்றுலா வளர்ச்சித்துறை முன்னாள் தலைவராக பதவிவகித்தவர்.
தற்போது இவர் அரியலூர் அழகப்பாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அரியலூரில் உள்ள வங்கிக்கு சென்று அவரது கணக்கில் ரூ.50ஆயிரம் எடுத்து காரின் பின்புறம் சீட்டில் வைத்தார். பின்னர் முன்பக்கமாக வந்து காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது அதில் இருந்த பணத்த காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது சம்பந்தமாக அரியலூர் போலீசில் புகார்செய்தார். போலீசார் தீவிர விசாரனை செய்தததில் இளவளகனிடம் பணத்தை திருடி சென்றது ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த மோசா(33) என தெரியவந்தது.
இளவழகன் வங்கியில் பணம் எடுத்து வருவதை நோட்டமிட்ட அவர் அவரை பின் தொடர்ந்து வந்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளார். இதை தொடர்ந்து அரியலூர் செந்துறை சாலை அமீனாபாத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பதுங்கி இருந்த மோசாவை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மோசாவை போலீசார் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மோசாவை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அறிவு உத்தரவிட்டார். இதையடுத்து மோசா அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.