உள்ளூர் செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டியில் விவசாயிகளுக்கு கோடை உழவு செய்ய ஆலோசனை

Published On 2023-05-03 09:48 GMT   |   Update On 2023-05-03 09:48 GMT
  • கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெறவேண்டும்.
  • கோடை உழவால் கோரை, அருகம்புல் போன்ற கலைகள் வெளியே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகிறது.

கடத்தூர்,

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் அனைவரும் நடப்பு பருவத்தில் தற்பொழுது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெறவேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம் பல நன்மைகள் உண்டாகிறது. கோடை உழவு செய்வதால் மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுகிறது. மேல்மண் தூய்மையாக மாறி நிலத்தில் நீர் இறங்கும் தன்மையை அதிகரிக்கிறது. மண்ணில் நல்ல காற்றோட்டம் உண்டாகி நுண்ணுயிர்கள் பெருக்கம் அடைகிறது. கோடை உழவால் கோரை, அருகம்புல் போன்ற கலைகள் வெளியே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகிறது. மேலும் பயிர்களை தாக்கும் பூச்சிகள்,அவைகளின் முட்டைகள் புழு ,மற்றும் கூட்டுப் புழுக்களை வெளிக்கொண்டுவந்து பறவைகளினால் உட்கொள்ளப்படுகிறது. மேலும் மலைப்பாங்கான பகுதியில் சரிவுக்கு குறுக்கே உழவு செய்வதால் மண் அறிக்கப்படுவது தடுக்கப்பட்டு மண்ணில் உள்ள சத்துக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அடித்துச் செல்லப்படுவது தடுக்கப்படுகிறது. ஆகவே பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் அனைவரும் நடப்பு பருவத்தில் பெய்யும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெற வேண்டு என வேளாண்மை உதவி இயக்குனர் முனி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News