உள்ளூர் செய்திகள்

வேளாண் கண்காட்சி மற்றும் விவசாயிகள் கருத்தரங்கை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைத்த காட்சி.

உயர்ரக உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான வேளாண் கண்காட்சி

Published On 2022-10-28 09:44 GMT   |   Update On 2022-10-28 09:44 GMT
  • வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்தின.
  • நிகழ்ச்சியினை கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் தொடங்கி வைத்தார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்தின. நிகழ்ச்சியினை கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் தொடங்கி வைத்தார். வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ராஜகோபால் முன்னிலை வகித்தார்.

வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுதுரை, தோட்டக்கலை துணை இயக்குநர் கணேசன், வேளாண் வணிகம், விற்பனைத்துறையின் வேளாண்மை துணை இயக்குநர் நாசர், மோகனூர் வட்டார அட்மா குழு தலைவர், நவலடி, மோகனூர் வட்டார ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி கருமண்ணன் ஆகியோர் இயற்கை முறை பயிர் சாகுபடி முறைகள் குறித்தும் அதன் வாயிலாக கிடைக்கபெறும் நஞ்சில்லா உணவு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜு, ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் அருட்செந்தில், புதுக்கோட்டை இயற்கை வேளாண் விஞ்ஞானி சின்னையா நடேசன், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் ஸ்ரீபாலாஜி, செங்கோ இயற்கை வேளாண்மை பண்ணை விவசாயி நல்லசிவம், கரூர் ஜெயகவின் இயற்கை வேளாண் பண்ணை விவசாயி மனோகரன் ஆகியோர் பேசினார்கள்.

திருச்செங்கோடு நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் சிறப்பு மண் மற்றும் நீர் ஆய்விற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விவசாயிகளுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சியை நாமக்கல் உழவர் பயிற்சி மைய வேளாண்மை துணை இயக்குநர் நாச்சிமுத்து, வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முருகன் தொகுத்து வழங்கினர். 

Tags:    

Similar News