உள்ளூர் செய்திகள்

சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு- வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

Published On 2023-03-21 05:23 GMT   |   Update On 2023-03-21 05:23 GMT
  • 25 மாவட்டங்களில் முதல்வரின் சிறுதானிய இயக்கம் செயல்படுத்த ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • விளைப்பொருட்களை உலர வைத்து சேமிக்க வசதியாக 253 உலர் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு களங்கள் கட்டப்படும்.

சென்னை:

தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:

சிறு தானிய மண்டலங்களில், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

2504 கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

25 மாவட்டங்களில் முதல்வரின் சிறுதானிய இயக்கம் செயல்படுத்த ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மாற்று பயிர் சாகுபடிக்கு 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.50 லட்சம் நிதியில் 200 ஏக்கர் பரப்பளவில் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

சிறுபாசன கடைமடைகள் தூர்வாரப்பட்டு பாசன நீர் கடைமடை வரை செல்ல வழிவகை செய்யப்படும்.

விளைப்பொருட்களை உலர வைத்து சேமிக்க வசதியாக 253 உலர் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு களங்கள் கட்டப்படும்.

அங்கக வேளாண்மை ஊக்குவிக்க பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News