உள்ளூர் செய்திகள்

தென்காசியில் அனைத்து வங்கியாளர் மீள் ஆய்வு கூட்டம்

Published On 2023-08-15 08:53 GMT   |   Update On 2023-08-15 08:53 GMT
  • தென்காசி மாவட்டத்தில் 85 வங்கிகள் இல்லா கிராம பகுதிகள் அமைந்துள்ளது.
  • கூடிய விரைவில் மக்கள் தொகை அடிப்படையில் புதிய வங்கி கிளைகள் திறக்க அறிவுறுத்தப்படுகிறது.

தென்காசி:

மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட அளவிலான அனைத்து வங்கியாளர் மீள் ஆய்வுக் கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு விருந்தினராக தென்காசி தனுஷ் குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தென்காசி பழனி நாடார், சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அளவிலான அனைத்து வங்கியாளர் மீள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் 85 வங்கிகள் இல்லா கிராம பகுதிகள் அமைந்துள்ளது. இதில் 232 குக் கிராமங்கள் உள்ளது. மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 85 வங்கி இல்லா கிராம பகுதிகளில் அனைத்து வங்கிகளின் பி.சி. மற்றும் ஏ.டி.எம். மூலம் பண பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது.

மேலும் கூடிய விரைவில் மக்கள் தொகை அடிப்படை யில் புதிய வங்கி கிளைகள் திறக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மாவட்ட அளவில் மிகவும் பின்தங்கிய பகுதி களில் உள்ளவர்களுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம் மாதம் தோறும் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியில் அனைத்து வங்கிகளில் நடைபெற்று வரும் கடன் வழங்குவது பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை முன்னோடி வங்கி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்திருந்தது.

Tags:    

Similar News