உள்ளூர் செய்திகள்

தமிழகம் முழுவதும் கால்நடை மருத்துவ கவுன்சிலிங் இந்த வாரம் தொடங்கும் நாமக்கல்லில் துணைவேந்தர் தகவல்

Published On 2022-11-03 07:08 GMT   |   Update On 2022-11-03 07:08 GMT
  • இந்திய கால்நடை மருந்தியல் மற்றும் நற்செயல் சொசைட்டி சார்பில் 22-வது அகில இந்திய மருந்தியல் நச்சியல் துறை தேசிய கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.
  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

நாமக்கல்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் இந்திய கால்நடை மருந்தியல் மற்றும் நற்செயல் சொசைட்டி சார்பில் 22-வது அகில இந்திய மருந்தியல் நச்சியல் துறை தேசிய கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் தலைமை தாங்கினார். நாமக்கல் கால்நடை மருத்து வக் கல்லூரி முதல்வர் செல்வராஜ் வரவேற்றார். இதில் உத்தர பிரதேச கால்நடை மருத்துவக் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ வஸ்தவர, ராஜஸ்தான் பல்கலை துணை வேந்தர் சதீஷ் கே கர்க், ஐ.எஸ்.வி.பி.டி தலைவர் தாக்கர், கருத்தரங்க அமைப்புச் செயலாளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கருத்தரங்கம் முடிவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் செல்வகுமார் கூறியதாவது:-

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை மூலம் தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை பிரிவில் பி.வி.எஸ்.சி கால்நடை மருத்துவம் மற்றும் பி.டெக் தொழில்நுட்ப பிரிவில் பி.டெக் உணவு தொழில்நுட்பம், பி.டெக் பால்வளம், பி.டெக் கோழி வளர்ப்பு ஆகிய பாடப்பிரிவுகள் நடைபெற்று வருகிறது.

தற்போது 2023-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளின் தரவரிசை பட்டியல் ஏற்கனவே கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

கிராமப்புற மற்றும் 7.5 சதவீத அரசு ஒதுக்கீடுகள் வழங்கப்படும் இடங்கள் விரைவில் நிரப்பப்படும். பொது பிரிவு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை இந்த வாரத்தில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News