ேகாவையில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
- கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரமணியின் கழுத்தில் இருந்த 2¾ பவுன் செயினை யாரோ திருடியது தெரியவந்தது.
- பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீளமேடு,
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் ரமணி(வயது56).
இவர் சம்பவத்தன்று திருப்பூரில் இருந்து சொந்த வேலை காரணமாக கோவை பீளமேடு வந்தார். பிளமேடு பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும், ரமணி பஸ்சை விட்டு கீழே இறங்கினார்.
அப்போது தனது கழுத்தில் இருந்த செயின் மாயமாகி இருந்தது.கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரமணியின் கழுத்தில் இருந்த 2¾ பவுன் செயினை யாரோ திருடியது தெரியவந்தது. இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊட்டியை சேர்ந்தவர் சாம்(19). இவர் டிப்ளமோ படித்து விட்டு, கோவை காந்திபுரத்தில் தங்கி ரெயில் நிலைய பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.இவர் தனது பயன்பாட்டிற்காக மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். அதனை தான் தங்கியிருக்கும் லாட்ஜ் அருகே நிறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போய் விட்டது. இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.