உள்ளூர் செய்திகள்

பூமாதேவி ஆலயத்தில் அன்னதான பூஜை நடந்தபோது எடுத்த படம்.

கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயத்தில் அன்னதான பூஜை

Published On 2023-06-19 08:52 GMT   |   Update On 2023-06-19 08:52 GMT
  • அன்னதான பூஜையையொட்டி 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.
  • பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் செய்திருந்தார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே மந்திதோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலய சித்தர் பீடத்தில் ஆனி மாத முதல் ஞாயிறு அன்னதான பூஜை நடைபெற்றது.

இதையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், குங்குமம் போன்ற பொருள்களால் அபிஷே கங்கள் நடை பெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை லட்சு மணன் சுவாமி தலை மையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிர மணியன் செய்திருந்தார். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி, மாரியப்பன், ஆறுமுகம், முருகன், பால இசக்கிராஜ், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, கெளசல்யா, பூமாரி, காந்தி மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொ ண்டனர். முடிவில் பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்ப ட்டது.

இவ்விழா ஏற்பாடு களை ஸ்ரீ குரு பாத தரிசன பரிபாலன அறக்க ட்டளை சார்பில் செய்திருந்தனர்.

இலவச கண் சிகிச்சை முகாம்

கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு துளசிங்க நகரில் அமைந்துள்ள அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் குரு பாததரிசன பரிபாலன அறக்கட்டளை மற்றும் ஐஸ்வர்யா கண் பரிசோதனை மையம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து பூமாதேவி ஆலய வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.

முகாமிற்கு மந்தித்தோப்பு பஞ்சாயத்து தலைவர் முத்து லட்சுமி மணி தலைமை தாங்கினார். உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். தொழில் அதிபர் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். தொழில் அதிபர் பழனி முருகன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார். ஐஸ்வர்யம் கண் ஒளி பரிசோதனையாளர் இசக்கி ராஜா பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தார். அப்பகுதி பொது மக்கள் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ குரு பாததரிசன பரிபாலன அறக்கட்டளை சார்பில் செ ய்யப்பட்டது. லட்சுமணன் சுவாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News