- மாணவர்களின் திறனை மேம்படுத்துதல், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யாகுமார் முன்னிலை வகித்தார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சையப்பன் கொட்டாய் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு 20-க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு பள்ளியின் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த தனியார் பள்ளிக்கு நிகரான பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்துதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்ற பணிகளை பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்த பாகல்அள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரம்யாகுமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் 15-க்கு மேற்பட்ட பாடல்கள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் செல்போன் பற்றிய நன்மை,தீமைகள் குறித்து எடுத்துக் கூறினார்.