உள்ளூர் செய்திகள்

மினி மாரத்தான் போட்டியை ஏ.எஸ்.பி. பல்பீர்சிங் கொடியசைத்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்

அம்பையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

Published On 2022-11-21 09:11 GMT   |   Update On 2022-11-21 09:11 GMT
  • தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி அம்பை பூக்கடை பஜாரில் தொடங்கியது.
  • இதில் ஆண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும், பெண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிங்கை:

தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி அம்பை பூக்கடை பஜாரில் தொடங்கியது. ஏ.எஸ்.பி. பல்பீர்சிங் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். பெண்கள் பிரிவு போட்டி அகஸ்தியர் பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளியில் இருந்து தொடங்கியது. இதை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை 12-ம் அணி தலைவர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மினி மாரத்தான் போட்டி யில் 3000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டார்கள். இதில் ஆண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும் பெண் கள் பிரிவில் 20 பேர்க ளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மினி மாரத்தான் போட்டியில் மாணவ- மாணவிகள், விளையாட்டுத் துறையினர், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News