குடிநீர் வசதி கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டம்-ஆண்டிபட்டியில் பரபரப்பு
- பாலசமுத்திரம் தெருக்களில் முறையான கழிவுநீர் ஓடை கட்டி தரப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது.
- அடிப்படை வசதிகள் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தெருக்களில் முறையான கழிவுநீர் ஓடை கட்டி தரப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சாலைகளில் மழைநீர் கழிவுநீரோடு தேங்கி நிற்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசு க்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்க ளுக்கு ஒருவாரத்திற்கும் மேலாக குடிநீர் வினி யோகம் செய்யப்படவில்லை. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் ஆத்திர மடைந்த கிராம மக்கள் இன்று காலை பள்ளி மாணவ-மாணவிகளுடன் பந்துவார்பட்டி, பாலசமுத்திரம் வழியாக ஆண்டிபட்டி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்த னர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஊராட்சிமன்ற தலைவர் கனிராஜ் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் அதனை ஏற்க மறுத்து குடிநீர் வினியோகம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.