உள்ளூர் செய்திகள்

புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

Published On 2023-09-26 07:47 GMT   |   Update On 2023-09-26 07:47 GMT
  • அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களில் ரூ.6.38 கோடியில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது
  • போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர்,

அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களில் ரூ.6.38 கோடியில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது.அரியலூர் ஒன்றியம் ராயம்புரம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், அங்கு ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் ராயம்புரம், பொட்டவெளி சாலை மேம்படுத்துதல், சிறுபாலம் திரும்ப கட்டுதல் மற்றும் 129 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச் சுவர் கட்டுதல் போன்ற பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.தொடர்ந்து செந்துறை ஒன்றியம், வாளரக்குறிச்சி கிராமத்தில் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் இரும்புலிக்குறிச்சி, பாளையபாடி , மணகெதி வரையிலும், நாகல்குழி ஊராட்சியில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் உஞ்சினி , வாரியங்காவல் வரையிலும் சாலையை அகலப்படுத்தல் பணியையும், அதே போல் இலை க்கடம்பூர் ஊரா ட்சியில் ரூ.1 கோடி மதிப்பீ ட்டில் செந்துறை , மாத்தூர் வரை சாலை மேம்படுத்துதல் பணியையும் தொடக்கி வைத்த அமைச்சர் சிவ சங்கர், பணியை தரமான பொரு ள்களை கொண்டு விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்ப ந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகி த்தார். உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்டப் பொறியாளர்கள் சிட்டிபாபு, ராஜா, செந்துறை வட்டாட்சியர் பாக்கியம்விக்டோரியா மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News