ஜெயங்கொண்டம் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம்
- ஜெயங்கொண்டம் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது
- அமைச்சர் சிவசங்கர் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர், உடையார்பா ளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.42.36 இலட்சம் ம திப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, இலையூரில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலையூர் - கண்டியங்கொல்லை சாலை அமைக்கும் பணி, பெரியாத்துக்குறிச்சியில், தேசிய சுகா தார திட்டத்தின் கீழ் ரூ. 30.00 இலட்சம் மதிப்பீட்டில்ஆ ரம்ப துணை சுகாதார நிலையம் கட்டிடம் கட்டும் ப ணி,ஓலையூரில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் ஓலையூர் - அழகாபுரம் சாலை அமைக்கும் பணி, திருக்கோணத்தில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் மதிப்பீட்டில் சிலம்பூர் - திருக்கோணம் சாலை அமைக்கும் பணி, விளந்தையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ரூபாய் 28.00 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கு ம் பணி, விளந்தையில், எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியா ய விலைக்கடை கட்டிடம் திறந்து வைக்கும் பணி, நா கம்பந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 5.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி, இடையக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில்,எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ. 5.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் திறந்து வைக்கும் பணி, ஆகிய பணிகளை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் முன்னிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்தார்.