உள்ளூர் செய்திகள்

நடைபயிற்சி திட்டம் விரைவில் தொடக்கம்

Published On 2023-11-01 08:56 GMT   |   Update On 2023-11-01 08:56 GMT
நடைபயிற்சி திட்டம் விரைவில் தொடக்கம்

அரியலூர், 

அரியலூரில் 8.கி.மீ தூரம் நடைபயிற்சி திட்டம் விரைவில் தொடங்கும் என மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

அரியலூரில் நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார திட்டத்தின் படி 8.கி.மீ தூரம் உள்ள நடைபயிற்சி பாதை கண்டறியப்பட்டு விரைவில் தொடங்க உள்ளது. அரியலூர் நகரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கல்லூரி சாலை வழியாக பல்லேரி அரசு மருத்துவமனை சாலை வழியாக பென்னி ஹவுஸ் தெருவில் இருந்து பெரம்பலூர் சாலை, சத்திரம்,

நகராட்சி நூலகம், தேரடி வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி செட்டி ஏரி வழியாக ஜெயங்கொண்டம் சாலையில் அரசு பல்துறை அலுவலக கட்டிடம் வரை 4 கிலோ மீட்டர் தூரமும் அங்கிருந்து திரும்பி மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை அடைந்து 8 கிலோமீட்டர் தூரம் நடை பயணத்தை நிறைவு செய்யுமாறு திட்டமிடப்பட்டுள்ளது

நடை பயிற்சி பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு இடம் மற்றும் இடையிடையே மருத்துவக் குழுவினர் முகாம் அமைத்து உடல்நலம் பரிசோதனை மேற்கொள்வார்கள். இப்பயண வழியில் ஒரு கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் இளைப்பாறும் இடமும், குடிதண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி உடல்நலம் காக்குமாறும் தினமும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் இத்தடத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News