உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு ஆழ்குழாய்,சொட்டுநீர் பாசனம் அமைக்க ஏற்பாடு
- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சுங்ககாரன்பட்டி, வீரணம்பாளையம், பிராந்தகம், கூடச்சேரி ஆகிய வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- (8 விவசாயிகள்) விவசாயிகளுக்கு நிலத்தடி போர் அமைத்து மின்சாரம் வழங்கி சொட்டுநீர் பாசனமும் அமைத்து தரப்படுகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் நடப்பு நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சுங்ககாரன்பட்டி, வீரணம்பாளையம், பிராந்தகம், கூடச்சேரி ஆகிய வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இக்கிராமங்களில் 10 ஏக்க ருக்கு மேல் தொடர்ச்சியாக தரிசு நிலங்கள் உள்ள (8 விவசாயிகள்) விவசாயிகளுக்கு நிலத்தடி போர் அமைத்து மின்சாரம் வழங்கி சொட்டுநீர் பாசனமும் அமைத்து தரப்படுகிறது. தகுதியுடைய விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.