உள்ளூர் செய்திகள்

குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் கைது

Published On 2024-08-23 05:45 GMT   |   Update On 2024-08-23 05:45 GMT
  • கர்ப்பிணி வீட்டிற்க்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள்.
  • மீண்டும் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி அருகே கிட்டனஅள்ளியில் கர்ப்பிணி பெண்ககளின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட கலெக்டர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் இணை இயக்குநர் சாந்தி, தலைமையில் மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவினர் கிட்டன அள்ளி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி வீட்டிற்க்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள், சிறிது நேரம் காத்திருந்து திடீரென வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர்.

விசாரித்தில் கர்ப்பிணிக்கு 8 வருடத்திற்க்கு முன்னர் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளதும், தற்போது வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என தெரிந்ததால் கருக்கலைப்பு செய்ய முயன்றது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் பனமரத்துபட்டியை அடுத்த குள்ளப்பநாயக்கனூரை சேர்ந்த சித்ராதேவி (42) என்பவரை பிடித்து பாப்பாரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். சித்ராதேவியை கைது செய்த போலீசார் மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News