உள்ளூர் செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.36.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
- துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த பயணியிடம் சோதனை.
- மொத்தம் 823 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் எம் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த சையத் இப்ராகிம் முகமது ரஃபி என்ற பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது, தங்கத்தை பசை வடிவில் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 707 கிராம் எடையுள்ள 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர் சட்டைப்பையில் மறைத்து எடுத்து வந்த 116 கிராம் தங்கச்சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது, மொத்தம் ரூ. 36.32 லட்சம் மதிப்புள்ள 823 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.