உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி

Published On 2023-01-10 10:55 GMT   |   Update On 2023-01-10 10:55 GMT
  • போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
  • போராட்டம் காரணமாக மாநகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் :

தமிழக சட்டமன்றம் நேற்று கூடியது.அப்போது தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் திராவிட மாடல் ஆட்சி மற்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் , அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை குறிப்பிடாமல் பேசிய ஆளுநருக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

இந்தநிலையில் இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தனர்.

இதில் போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இதில் கலந்துகொண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆளுநர் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், கிழித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இந்த போராட்டம் காரணமாக மாநகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News