உள்ளூர் செய்திகள்

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-04 07:32 GMT   |   Update On 2023-07-04 07:32 GMT
  • காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும்.
  • குடும்ப பாது காப்பை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கம் சார்பில் நடை பெற்ற கவனஈர்ப்பு ஆர்பாட்டத் திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் சுமதி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கலையரசி, தமிழ்பிரியா, ரம்யா, விசா லாட்சி, மணிமேகலை, உமா ராணி, விஜயலட்சுமி ஆகி  யோர் முன்னிலை வகித்த னர். கடலூர் மாவட்ட தலை வர் மணித்தேவன் கலந்து கொண்டு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை களான பள்ளி மாணவர் களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும்.

வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு பொறுப்பாளருக்கான வயது வரம்பை 60 ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், சத்துணவு மையத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குடும்ப பாது காப்பை கருத்தில் கொண்டு ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். என்பது போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். முடிவில் மீனாட்சி நன்றி கூறினார் இதில் நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமத்தின் சத்து ணவு பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் சமையலர்கள், உதவியா ளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News