உள்ளூர் செய்திகள்

பேரணியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

ஒட்டன்சத்திரம் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

Published On 2022-07-12 05:09 GMT   |   Update On 2022-07-12 05:09 GMT
  • சூழல் மற்றும் மண்வளம் காக்கும் விதமாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
  • அரசு பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் சுற்றுப்புற சூழல் மற்றும் மண்வளம் காக்கும் விதமாக தமிழக அரசு அறிவித்த பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து மஞ்சப்பை முன்னெடுப்பை தொடங்குவோம்.

பிளாஸ்டிக்கில் இருந்து நமது உலகை மீட்டெடுக்கும் ஓர் முயற்சி குறித்த விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.

இப்பேரணியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு பள்ளி மாணவ மாணவியர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பேரணி தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக வந்து நிறைவடைந்தது.

Tags:    

Similar News