உள்ளூர் செய்திகள்

மகா மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம். 

மகா மாரியம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்

Published On 2022-07-24 07:53 GMT   |   Update On 2022-07-24 07:53 GMT
  • பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கி ழமையன்று ஒவ்வொரு வரு டமும் பால்குட அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
  • மகா மாரியம்மனுக்கு 32-ம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கி ழமையன்று ஒவ்வொரு வரு டமும் பால்குட அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதே போல் இந்த வருடமும் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று மகா மாரியம்மனுக்கு 32-ம் ஆண்டு 108 பால்குட அபிஷேக விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால் குடங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர். பிற்பகல் 12 மணிக்கு மகா மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடை பெற்றது. இதில் வேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.பால்குட அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழுவினர், பால்குட அபிஷேக குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News