உள்ளூர் செய்திகள்

திருப்பூர் புஷ்பாநகர் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் மூடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் சங்கத்தினர் ஸ்டிரைக்- தினமும் ரூ.1கோடி வர்த்தகம் பாதிப்பு

Published On 2023-07-17 09:41 GMT   |   Update On 2023-07-17 09:41 GMT
  • 100-க்கும் மேற்பட்ட குடோனில் இருப்பு வைத்து ஓ.இ.மில்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
  • வருகிற 19-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த போராட்டம் நடக்கிறது.

திருப்பூர்:

திருப்பூரில் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் 85-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் பனியன் கட்டிங் வேஸ்ட் துணியில் இருந்து நிறம் வாரியாக சிறு, சிறு துணியை பிரித்து அதை மொத்தமாக வாங்கி ஓ.இ. மில்களுக்கு சப்ளை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார்கள். ஓ.இ.மில்களுக்கான முக்கிய மூலப்பொருளை வினியோகம் செய்யும் வியாபாரிகளாக உள்ளனர்.

திருப்பூர் டூம்லைட் மைதானம், நெசவாளர் காலனி, மங்கலம் பகுதிகளில் இருந்து பனியன் கட்டிங் வேஸ்ட் பிரிக்கப்பட்ட துணிகளை பெற்று 100-க்கும் மேற்பட்ட குடோனில் இருப்பு வைத்து ஓ.இ.மில்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். நாளொன்றுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கழிவுதுணிகளை ஓ.இ.மில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஓ.இ.மில்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து ஓ.இ.மில்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூர் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று முதல் தொடர் வியாபார நிறுத்தம் மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 19-ந் தேதி வரை 3 நாட்கள் இந்த போராட்டம் நடக்கிறது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ரூ.1 கோடி வர்த்தக இழப்பு ஏற்படுவதுடன் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News